Correspondent's Message

“கனவுகளை காட்சிப்படுத்த உதவும் கல்விக் கூடம்”

இங்கே ‘மருத்துவர், பொறியாளர், ஆசிரியர், விஞ்ஞானி, அரசு அதிகாரி’ என பல கனவுகளோடு படிக்க வரும் மாணவர்களுக்கு கல்வியின் ஆழம் கற்பிக்கப்படுகிறது.

மேலும் ‘யோகா, கராத்தே, வில் வித்தை, நடனம், இசை’ போன்ற தனித்துவ திறனால் சாதிக்க துடிக்கும் மாணவர்களுக்கு கலைப்பாடங்களின் நுணுக்கங்கள் போதிக்கப்படுகின்றன.

எம் மாணவர்கள் ஆற்றலில், அறிவில், கல்வியில், சிந்தனையில் மற்றும் செயல்பாட்டில் தன்நிகரில்லா உயரத்தை எட்டிப்பிடிக்க உறுதுணையாக நிற்கும் பெற்றோருக்கு மனமார்ந்த நன்றிகள்.

"கருமையான மேகக் கூட்டங்களில் இருந்து விழும் மழைத்தூறல்களைப் போல"
எம் மாணவர்களின் அறிவும் அதனால் கிடைக்கும் கற்றல் வளங்களும் ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் ஒரு எழுச்சி தீபமாக அமைய என்றும் என் பயணம் தொடரும்.

மாணவா எழுந்து வா!
உன்னுள் இருக்கும் உன்னை உணர வா!

என்றும் அன்புடன்
A.R.K. அரவிந்த் BE, MBA, LLB.,
தாளாளர்.